Thursday, May 12, 2011

விஜய் சீமானின் இயக்கத்தில்

வேலாயுதம் படத்தில் பதினைந்து வில்லன்களாம். இவர்கள் அத்தனை பேருமே விஜய்யால் ஃபுட்பால் ஆட போகிற சினிமா வில்லன்கள். ஆனால் அவரது கண்ணுக்கு தெரியாத இன்னொரு வில்லனாக இருக்கிறது சூழ்நிலை. தமிழக அரசியலில் வருகிற 13 ந் தேதி என்ன முடிவு வருமோ, அதை பொருத்துதான் இருக்கிறது அவரது நிம்மதியும் வளர்ச்சியும்.

ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு படத்தை விற்றுவிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில்தான் இந்த படத்தில் நடிக்கவே ஒப்புக் கொண்டாராம் விஜய். ஆனால் நடக்கிற நடப்புகள் யாவும் அவரது எண்ண ஓட்டத்திற்கு எதிர் திசையிலேயே இருக்கிறதாம். ஆனால் உறுதிபடுத்தப்படாத இந்த தகவல் உண்மையாகி விடக் கூடாதே என்பதற்காக தொடர் முயற்சியில் இருக்கிறாராம் விஜய்.

வேலாயுதம் படம் முடிந்தவுடன் விஜய் சீமானின் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். தகவலறிந்த சீமான் வட்டாரம் மகிழ்சியில் திளைக்கிறது.அதற்கு இடையில் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் எனக்கூறப்படுகிறதுஎது 54 வது  55  வது படம் எனத்தெரியவில்லை.மே மாதம் 13 ம் 
தேதி வரை பொறுத்திருப்போம்.

No comments:

Post a Comment

வேலாயுதம் பற்றி சரண்யா மோகன் பேட்டி

velayudham HD trailer