Saturday, June 18, 2011

விஜய் நடிக்கும் அடுத்த படம் என்ன?

இன்று திரையுலகில் நிலவும் கேள்விகளில் ஒன்று விஜய் நடிக்கும் அடுத்த படம் என்ன என்பதாகும்.விஜய் தற்பொழுது வேலாயுதம் படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பில் உள்ளார்.விரைவில் இப்படத்திற்கு பூசணிக்காய் உடைத்து நிறைவு விழா செய்ய உள்ளனர்.விஜயின் அடுத்த படமான நண்பனும் மிக வேகமாக சங்கரின் முன்னைய படங்களைப்போல் அல்லாமல் நகர்கிறது.அடுத்து விஜய் நடிக்கும் படம் எது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

விஜய் வேலாயுதம் படம் முடிவடைந்தவுடன் நடிக்க இருந்த படம் சீமான் இயக்கத்தில் பகலவன் ஆகும்.சீமான் சொன்ன கதைபிடித்தவுடன் திரைக்கதை அமைத்து கொண்டுவரும்படி விஜய் சொல்லி அதன் படி திரைக்கதை அமைத்து படத்தை விரைவில் தொடங்கும் நிலையில் உள்ளார் சீமான்.இது மிகவிரைவில் முடிவடையும் படமாக உள்ளது.விஜயை மாறுபட்ட கோணத்தில் காட்ட உள்ளார் சீமான்.இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு.இவரும் படத்தை பற்றி உத்தியோக பூர்வமாக கூறியுள்ளார் விஜயும் விரைவில் தொடங்கும் என கூறியுள்ளார்.ஆனால் இப்படத்தின் தொடக்கம் விஜயின் வரவுக்காக காத்திருக்கிறது.விஜய் நாளைக்கு தொடங்குவோம் என்றால் உடனே ஆரம்பமாகும் நிலையில் உள்ளது.

அடுத்த படம் மணிரத்தினத்தின் படம் .மணிரத்தினத்தின் பொன்னியின்செல்வன் கைவிடப்பட்டது எனக்கூறப்பட்டது. ஆனால் அப்படம் கைவிடப்படவில்லை சிறிது காலத்தின் பின் தொடங்க உள்ளார் என நேற்று மணிரத்தினத்தின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து செய்தி வெளியாகியது.ஆனால் விஜயை வைத்து பொன்னியின் செல்வனுக்கு பதிலாக புதிய ஒரு படத்தை மணிரத்தினம் இயக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.இப்படம் எப்பொழுது தொடங்கும் எனத்தெரியவில்லை.

அடுத்த படம் அமீரின் கனவுப்படமான கண்ணபிரான்.அமீர் விஜயை சந்தித்து பேசி சம்மதம் வாங்கிவிட்டார். தனது தற்போதைய படமான ஆதிபகவானை முடித்து விட்டு கண்ணபிரானை தொடங்க உள்ளாராம்.இதில் யார் கதாநாயகி தயாரிப்பாளர் என்பன தேர்வு நடக்கிறது .இப்படத்துக்கு இசை யுவன்சங்கர்ராஜா என உறுதிப்படுத்திவிட்டார் அமீர்.


இவ்வாறு இயக்குனர்கள் வரிசையில் நிற்க அடுத்த படம் எது என விஜய் தனது பிறந்த நாளன்று அறிவிக்க உள்ளார். அனைவரும் எதிர்பார்பது மணிரத்தினம்.ஆனால் பகலவன் முந்தும் என விஜய்க்கு நெருங்கிய வட்டாரம் இன்று தெரிவித்துள்ளது.இப்படம் பற்றிய உத்தியோக அறிவிப்பை விஜய் தனது பிறந்த நாளன்று வெளியிட உள்ளராம்.

Friday, June 17, 2011

இளையதளபதி விஜயுடன் இணைந்து நடிகர் சல்மான்கான்


பாலிவூட் நடிகர் சல்மான்கான் இன்று மாலை சென்னை வருகிறார்.இவர் மார்கண்டேயன் பட பாடல்வெளியீட்டில் கலந்து கொள்ளவே வருகிறார்.

இப்படத்தின் பாடலை சல்மான்கான் வெளியிட இளையதளபதி விஜய் வாங்கவுள்ளார்.இப்படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர் பெப்சிவிஜயன் இயக்கி தயாரிக்கிறார் அவரது மகன் இப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகின்றார்.விஜயுடன் இணைந்து வில்லு குருவி உள்ளிட்ட பல படங்களில் சண்டைபயிற்சியாளராக பங்குபற்றியவர் பெப்சிவிஜயன் அதனால் விஜய் இப்பாடல் வெளியீட்டுக்கு கலந்து கொள்கிறார்.தபாங் உள்ளிட்ட ஹிந்தி படங்களில் சல்மானுடன் இணைந்து பணியாற்றியவர் பெப்சி விஜயன்.இதனால் விஜயும் சல்மானும் இசைவெளியீட்டுக்கு வர சம்மதித்தனர்.இப்பாடல் வெளியீடு நிகழ்வு முடிந்தவுடன் மும்பை செல்கிறார் சல்மான்.

Thursday, June 16, 2011

நண்பன்


"த்ரீ இடியட்ஸ்" இந்தி படத்தில் கரீனா கபூர் நடித்த கதாபாத்திரத்தில், தமிழ் ரீமேக் படமாக வெளிவரும் "நண்பன்" படத்தில் நாயகியாக இடையழகி இலியானா நடித்துள்ளார்.
"
த்ரீ இடியட்ஸ்" படத்தை பார்க்க என் சகோதரி வற்புறத்தி அழைத்தாள். அதனால் போய் பார்த்தேன். இயக்குனர் ஷங்கர், இந்த ரீமேக் படத்தை இயக்குகிறார் என்பதால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
கரீனா கபூர் நாயகியாக சிறப்பாக அந்த படத்தில் நடித்திருப்பார், நீங்கள் இதில் எப்படி நடித்திருக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள். "நண்பன்" படத்தில் அவர் நடித்த மாதிரி என்னை பார்க்க முடியாது.
திரைக்கதையில் நிறைய மாற்றங்களை இயக்குனர் ஷங்கர் செய்துள்ளார். அப்படியே ரீமேக் செய்யவில்லை. வேற மாதிரி இலியானாவை "நண்பன்" படத்தில் பார்க்கலாம்.
படப்பிடிப்பு தளத்தில் ஷங்கர் சார் ரொம்ப சீரியசாக படம் பண்றவர் என நினைத்திருந்தேன். ஆனால், நடந்ததே வேறு. அவ்வளவு எளிமையாக, ஜாலியாக எல்லோரிடமும் பழகினார்.

விஜய் நடித்து வரும் ' வேலாயுதம் ', அஜீத் நடித்து வரும் ' மங்காத்தா 'ஆகிய இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாக இருக்கிறது.


விஜய் நடித்த 'போக்கிரி', அஜீத் நடித்த 'ஆழ்வார்' ஆகிய இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாகின. அதற்குப் பிறகு இருவருமே தங்களது படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதை தவிர்த்து வந்தார்கள்.

இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் ' வேலாயுதம் ', அஜீத் நடித்து வரும் ' மங்காத்தா ' ஆகிய இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாக இருக்கிறது. இன்னும் தேதிகள் மட்டும் முடிவாகவில்லை. ' வேலாயுதம் ' படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் தான் பாக்கி இருக்கிறதாம். அதன் பின்பு பட சம்பந்தப்பட்ட பணிகள் என அனைத்தையும் முடித்து ஆகஸ்ட் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் வெளியிட இருக்கிறார்கள். ' மங்காத்தா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அது முடிந்தவுடன் பட சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்தையும் முடித்து ஆகஸ்ட் மாதம் வெளியிட இருக்கிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதமாக ' மங்காத்தா ' தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது டிவிட்டர் இணையத்தில் " ஜுலை மாதம் பாடல்கள் வெளியாகும், ஆகஸ்ட் மாதம் பட வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.ஒரே மாதத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களும் வெளியாவதால் தியேட்டர் அதிபர்கள் காட்டில் பண மழை தான்!

வேலாயுதம் இசைவெளியீடு ஜூலை 5


விஜயின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் வேலாயுதம் இப்படத்தின் இசைவெளியீடு எப்பொழுது எனக்காத்துக்கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இப்படத்தின் இசை வெளியீடு தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் கடந்த இரண்டு மாதமாக வந்த வண்ணம் இருந்தன ஆனால் இன்று ஜூலை 5 ம் திகதி பாடல் வெளியாகும் எனக்கூறப்பட்டுள்ளது.

விஜயின் படங்களில் பாடல்கள் முக்கியம் பெறுகின்றன அந்த வகையில் இப்பட பாடல்களும் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றன விஜயின் இப்படத்துக்கு விஜய் அன்டனி இசையமைத்துள்ளார் இப்பாடல்களை இன்னும் இரு வாரங்களில் கேட்கலாம். குத்து ரொமான்டிக் மாஸ் பாடல் தீம் மியூசிக் என மொத்தம் 7 பாடல்கள் உள்ளன.இதில் எல்லாப்பாடல்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படாமல் அமையவுள்ளன.

இப்படத்தின் சொன்னால் புரியாது சொல்லுக்குள் அடங்காது என்ற பாடலை 2 கோடி செலவில் பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.இப்படத்தின் பாடல் வரிகளை ஏற்கனவே தந்திருந்தோம் எனினும் இப்பட பாடல் வெளிவர உள்ளமையால் மீண்டும் தருகிறோம்.

1)
சொன்ன புரியாது சொல்லுக்குள் அடங்காது

2)
மயக்கி புட்டான்

3)
ரத்ததின் ரத்தமே

4)
மஞ்ச நதி மரத கட்ட

5)
ஹன்சிகாவுடன் ஒரு மெலொடி 

6)
வேல வேல வேலயுதம்

7)
தீம் ஸோங்

என்பனவாகும் விஜயின் பிறந்த நாளன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்து வைக்கவுள்ளார் அது என்னவென்று விரைவில் அறிவிப்போம் . எதிர்பாருங்கள் விரைவில்.


வேலாயுதம் பற்றி சரண்யா மோகன் பேட்டி

velayudham HD trailer