Thursday, June 16, 2011

விஜய் நடித்து வரும் ' வேலாயுதம் ', அஜீத் நடித்து வரும் ' மங்காத்தா 'ஆகிய இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாக இருக்கிறது.


விஜய் நடித்த 'போக்கிரி', அஜீத் நடித்த 'ஆழ்வார்' ஆகிய இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாகின. அதற்குப் பிறகு இருவருமே தங்களது படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதை தவிர்த்து வந்தார்கள்.

இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் ' வேலாயுதம் ', அஜீத் நடித்து வரும் ' மங்காத்தா ' ஆகிய இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாக இருக்கிறது. இன்னும் தேதிகள் மட்டும் முடிவாகவில்லை. ' வேலாயுதம் ' படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் தான் பாக்கி இருக்கிறதாம். அதன் பின்பு பட சம்பந்தப்பட்ட பணிகள் என அனைத்தையும் முடித்து ஆகஸ்ட் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் வெளியிட இருக்கிறார்கள். ' மங்காத்தா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அது முடிந்தவுடன் பட சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்தையும் முடித்து ஆகஸ்ட் மாதம் வெளியிட இருக்கிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதமாக ' மங்காத்தா ' தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது டிவிட்டர் இணையத்தில் " ஜுலை மாதம் பாடல்கள் வெளியாகும், ஆகஸ்ட் மாதம் பட வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.ஒரே மாதத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களும் வெளியாவதால் தியேட்டர் அதிபர்கள் காட்டில் பண மழை தான்!

No comments:

Post a Comment

வேலாயுதம் பற்றி சரண்யா மோகன் பேட்டி

velayudham HD trailer