Tuesday, May 10, 2011

விஜயை மேலும் இளமையாக காணலாம்

நண்பன் படத்தின் கமராமேன் மனோஜ் பரமஹம்ஷா ஆகும்.இவர் தனது திரையுலக வாழ்க்கை பற்றிக்கூறினார்.அதில் நண்பன் படம் பற்றிக்கூறிய போது சங்கருடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பாக உள்ளது.பல புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி படத்தை எடுத்து வருகிறோம்.வித்தியாசமான கமராக்களை பயன்படுத்துகின்றோம் என்றார்.ஊட்டி தெகிரான் சென்னை அந்தமான் நெதர்லாந்து ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.சுவிஸர்லாந்து மற்றும் லண்டனிலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடத்தவுள்ளோம் என்றார்.இதில் விஜயை மேலும் இளமையாக காணலாம் என்றார்.இதில் கல்லூரியை அடிப்படையாக கொண்ட கதையாக அமைவதால் அதற்கு ஏற்ற மாதிரி படப்பதிவை காணலாம்.இந்தியாவில் எடுத்த காட்சிகள் கூட வெளிநாட்டில் எடுத்தது போல அமைந்துள்ளது என்றார்.விஜய் ஜீவா சிறீகாந் இலியானா என பலர் நடிப்பதால் அனைவருடனும் ஒரு குடும்பம் போல் பழகக்கூடியதாக இருக்கின்றது.பல இடங்களில் விஜயும் சங்கரும் என்னை உற்சாகப்படுத்தினர்.விஜயுடன் இணைவது சிறப்பாக உள்ளது.நாங்கள் தொடர்ந்து படங்களில் இணைய விரும்புகிறோம் என்றார்.

No comments:

Post a Comment

வேலாயுதம் பற்றி சரண்யா மோகன் பேட்டி

velayudham HD trailer